/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறாதவர்களுக்கு அழைப்பு
/
தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறாதவர்களுக்கு அழைப்பு
ADDED : மே 13, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில், 1964 முதல், 2018 வரை தேர்ச்சி அடைந்த பயிற்சியாளர்கள், தங்கள் அசல் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ்களை, இதுவரை பெறாமல் இருந்தால், அலுவலக வேலை நாட்களில், மதியம், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரை நேரில் வந்து, அடையாள அட்டை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இச்சான்றிதழை மூன்று மாதத்துக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, 0422 - 2642 044, 87544 95829 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.