/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : அக் 23, 2024 12:07 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில், விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்துள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், சொட்டு நீர் பாசனத்தை ஊக்குவிக்க, விவசாயிகளுக்கு மானிய விலையில் தோட்டக்கலை துறை சார்பில் சொட்டு நீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது.
கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு, 2.15 கோடி மதிப்பீட்டில், 600 ஏக்கர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், 140 ஏக்கர் அளவுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 460 ஏக்கர் அளவில் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு அமைத்து தரப்படும். இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவித மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவித மானியமும் வழங்கப்படுகிறது. இதில், சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக, 5 ஏக்கரும், மற்ற விவசாயிகளுக்கு, 12.5 ஏக்கரிலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படும்.
இத்தகவலை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.