sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலெக்டர் பேர சொல்லி நல்லா கட்டுறாங்க கல்லா; ஸ்வீட், காரம் குடுத்து மேயர் போடுறாங்க குல்லா!

/

கலெக்டர் பேர சொல்லி நல்லா கட்டுறாங்க கல்லா; ஸ்வீட், காரம் குடுத்து மேயர் போடுறாங்க குல்லா!

கலெக்டர் பேர சொல்லி நல்லா கட்டுறாங்க கல்லா; ஸ்வீட், காரம் குடுத்து மேயர் போடுறாங்க குல்லா!

கலெக்டர் பேர சொல்லி நல்லா கட்டுறாங்க கல்லா; ஸ்வீட், காரம் குடுத்து மேயர் போடுறாங்க குல்லா!


ADDED : அக் 28, 2024 11:59 PM

Google News

ADDED : அக் 28, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.

காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''என்னக்கா... பக்கம் பக்கமா விஜய் கட்சி மாநாட்டை பத்தி எழுதியிருக்காங்களா...'' என, ஆர்வமாய் கேட்டாள்.

''அதெல்லாம் இருக்கட்டும் மித்து... நம்மூர்ல இருந்து போயிருப்பாங்களே... என்ன நடந்துச்சாம்... விசாரிச்சியா...''

''கிட்டத்தட்ட... கோவை வடக்கு, தெற்கு, கிழக்குன்னு மூணு மாவட்டத்துல இருந்து, 600 வண்டி, 400 கார்ல கெளம்பி போனதா சொல்றாங்க. கிட்டத்தட்ட, 18 ஆயிரம் பேர் வரைக்கும் போயிருக்காங்களாம்.

ரூல்ஸ்படி, ஒவ்வொரு வண்டிக்கும் தனித்தனியா 'பர்மிட்' வாங்கி, எந்த சிக்கலும் வராத அளவுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்களாம். இதையெல்லாம் பார்த்து, திராவிட கட்சிக்காரங்க மிரண்டு போயிருக்காங்க.

இவ்ளோ வண்டிகளுக்கு எப்படி 'பர்மிட்' வாங்குனாங்கன்னு ஆச்சரியமா பார்க்குறாங்க... சாப்பாடு பிரச்னை வராத அளவுக்கு, அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களே ஏற்பாடு செஞ்சிட்டாங்களாம். எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டம் அதிகமா வந்ததால, கட்சிக்காரங்க பிரமிப்புல இருக்காங்க''

கட்சியினருக்கு 'வார்னிங்'


''பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி வந்திருந்தாரே...''

''ஆமாக்கா... கருமத்தம்பட்டி டிப்போவுல புது தாழ்தள சொகுசு பஸ் துவக்க விழா நடந்துச்சு; 10 நிமிஷம் தான் நிகழ்ச்சியே நடந்துச்சு. மினிஸ்டர் வர்றதுக்கு முன்னாடி, மழை பெஞ்சதால, டிப்போவுக்குள்ள சேறும் சகதியுமாகிடுச்சு; மினிஸ்டர் நடந்து போறதுக்காக கம்பளம் விரிச்சாங்க; அது மேல வேறு யாரும் நடந்து போகாத அளவுக்கு, 'விழிப்போட' போக்குவரத்து கழக அதிகாரிகள் பார்த்துக்கிட்டு இருந்தாங்க,''

''அதை விட கொடுமை என்னான்னா... தேங்கியிருந்த மழை தண்ணீயை ஒரு சட்டியில் முறத்தை வச்சு அள்ளுனாங்க. சைரன் வச்ச கார் வர்றதை பார்த்ததும், கட்சிக்காரங்க பட்டாசு வெடிச்சாங்க; கார்ல இருந்து கலெக்டர் இறங்குனதும், உடன்பிறப்புகள் 'அப்செட்' ஆகிட்டாங்க.

மினிஸ்டர் வந்ததும், மறுபடியும் பட்டாசு வெடிச்சு அமர்க்களப்படுத்துனாங்க. அவர் கூட போட்டோ எடுக்குறதுக்கு நீ... நான்னு... போட்டா போட்டி நடந்திருக்கு...''

''ஒரே நாள்ல மூணு மாவட்டம் சார்பிலும், கட்சிக் கூட்டம் நடத்துனாங்களே... உடன்பிறப்புகள் உள்ளக்குமுறலை கொட்டுனாங்களா...''

''முதல்கட்டமா, லோக்சபா தேர்தல்ல சரியா வேலை பார்க்காத பூத் ஏஜன்ட்டுகளை மாத்தச் சொல்லி, 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க. மொட்டைக் கடுதாசி அனுப்புறது; தேவையில்லாம சென்னைக்கு படையெடுக்குறது; தலைமை அலுவலகத்துக்கு போயி தொந்தரவு செய்ற வேலையை வச்சுக்க கூடாதுன்னு, 'வார்னிங்' செஞ்சதா உடன்பிறப்புகள் சொல்றாங்க...''

பண்டிகை பணம்


''கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி செலவுக்கு பணம் பட்டுவாடா செஞ்சாங்களாமே...''

''மாவட்டம், பகுதிக்கழகம், ஒன்றிய நிர்வாகிகளுக்கு தலா ஒரு 'ல'கரம் பட்டுவாடா ஆயிருக்குதாம். நகரத்துக்கு ஐம்பதாயிரம், கிளை நிர்வாகிகளுக்கு அஞ்சாயிரம் வரை குடுத்திருக்கறதால உடன்பிறப்புகள் குஷியா இருக்காங்க...''

''இதே மாதிரி, அ.தி.மு.க.,விலயும் பட்டுவாடா செய்றது வழக்கம். இந்த தடவை கட்சி நிர்வாகிகள் யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்; 'கண்காணிப்பு' பலமா இருக்கு. பண்டிகை பணம், வீடு தேடி வரும்னு 'மாஜி' தரப்புல சொல்லியிருக்காங்களாம்...'' என்றபடி, நகர் வலத்துக்கு புறப்பட்டாள் மித்ரா.

மேயருக்கு வாழ்த்து மழை


ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த சித்ரா, ''மேயர் ஆபீசுல இருந்து ஸ்வீட்ஸ் பாக்ஸ் கொடுத்தாங்களாமே; கார்ப்பரேஷன் ஆபீஸ் முழுக்க, இதே பேச்சா பேசுறாங்களே...'' என, கேட்டாள்.

''ஆமாக்கா... உண்மைதான்! டவுன்ஹால்ல இருக்கற மெயின் ஆபீஸ் ஸ்டாப்களுக்கு ஸ்வீட், காரம், பட்டாசு, 500 ரூபாய் ரொக்கம் கொடுத்திருக்காங்க. இதுவரைக்கும் எந்த மேயரும் இப்படி கவனிக்கலை... இந்த மேயருக்கு தான் எங்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு தோணிருக்கு பாருங்கன்னு, கார்ப்பரேஷன் ஸ்டாப்ஸ் சிலாகிச்சு பேசுறாங்க...''

''100 ஸ்வீட் பாக்ஸ் கேட்டு, கார்ப்பரேஷன் உதவி பொறியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தாங்களாமே...''

''டெபுடி அசிஸ்டென்ட் ஒருத்தரு, ஆபீசர்களை மிரட்டிட்டு இருக்காரு. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மேயர் தலைமையில நடக்குற குறைகேட்பு கூட்டத்துல, ஆபீசர்ஸ் உக்கார்ற வரிசையில அசிஸ்டென்ட் உட்கார்ந்து, 'கெத்து' காட்டுவாரு. 100 ஸ்வீட் பாக்ஸ் வேணும்னு அடம் பிடிச்சிருக்காரு. அவரோட தொல்லை தாங்க முடியாம, ஒவ்வொரு இன்ஜினியரும் அவுங்களால முடிஞ்ச அளவுக்கு, ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக் குடுத்தாங்களாம்,''

கரன்சி மழை


''கார்ப்பரேஷன்ல இருக்கற வருவாய் பிரிவு ஆபீசர், வசூல்ல பட்டைய கெளப்புறாராமே...''

''ஆமாக்கா... உண்மைதான்! அ.தி.மு.க., ஆதரவாளரான அவரு, கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான், நம்மூருக்கு திரும்பி வந்தாரு. முருகன் பெயருள்ள நான்கெழுத்து உதவியாளர் மூலமா, பில் கலெக்டர்கள்கிட்ட வசூல் பண்றாராம்.

வரி விதிக்கச் சொல்லி, அப்ளிகேஷன் கொடுக்கற பப்ளிக் கிட்ட, நீங்க எவ்ளோ வேணும்னாலும் வாங்கிக்குங்க; மெயின் ஆபீசுக்கு இவ்ளோ கொடுத்தாகணும்னு, கறாரா கண்டிஷன் போட்டுருக்காராம்,''

''இதை பயன்படுத்திக்கிட்டு, உதவியாளரும் பெருந்தொகையை அமுக்கிடுறாராம். விஜிலென்ஸ் டிபார்ட்டுமென்ட்காரங்க... கார்ப்பரேஷன் ஆபீசுக்கு ரெய்டு வந்தா நல்லா இருக்கும்னு, பில் கலெக்டர்ஸ் ஆசைப்படுறாங்க... அந்தளவுக்கு டார்ச்சர் தாங்க முடியாம அவதிப்படுறாங்களாம்''

எல்லாம் பய மயம்...!


''எனக்கொரு தகவல் தெரியும் சொல்லட்டுமா... கலெக்டர் ஆபீசுக்கு விஜிலென்ஸ் ஆபீசர் திவ்யா போனதும்... ஸ்டாப்ஸ் பலரும் அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டாங்களாம். தீபாவளி நேரத்துல... ஒவ்வொரு செக்சனிலும் ஸ்வீட்ஸ் கொடுக்கறதும்... அன்பளிப்பு வாங்கறதும் வெளிப்படையா நடந்துட்டு இருந்துச்சு.

விஜிலென்ஸ் ஆபீசரே நேரடியா வந்திருக்காரேன்னு பயந்துட்டாங்க... உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு வந்திருக்காருன்னு, தெரிஞ்சதுக்கப்புறம் நிம்மதி பெருமூச்சு விட்டுருக்காங்க...'' என்றபடி, ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள காலியிடத்தில், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா.

''அக்கா... ஒரு கிலோ தங்கத்தை அமுக்குன இன்ஸ்., பத்தி, போன வாரம் பேசியிருந்தோமே; அவரை வேறொரு ஸ்டேஷனுக்கு மாத்திட்டாங்களாம்... ''

''மித்து, உப்பு தின்னவன் தண்ணீ குடிக்கணுங்கிறது பழமொழி. தப்பு செஞ்சார்; அனுபவிக்கிறார். அதை விடுங்க. நம்மூர் டெபுடி கமிஷனர் ஸ்டாலின், காவல்துறையில தடாலடியா களமிறங்கி வேலைபார்க்குறதுனால, போலீஸ்காரங்க ஹேப்பியா இருக்காங்க.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ரேஸ்கோர்ஸ் ஏரியாவுக்கு வந்திருக்காரு. ரோந்து வாகனத்துல ஒரு ரவுண்ட் போன அவர், போலீஸ்காரங்ககிட்ட 'பிரெண்ட்லி'யா பேசியிருக்காரு.

டீசல் பத்தலைங்கிற விஷயத்தை, வெளிப்படையா சொல்லியிருக்காங்க. அதை கேள்விப்பட்டதும், அளவீட்டை அதிகப்படுத்திக் கொடுக்கச் சொல்லி ஆர்டர் போட்டியிருக்காராம்...''

காதல் ஜோடி அலப்பறை


''அக்கா... ஒழுக்கமா ரோந்து போனா, டீசல் அளவை அதிகரிச்சுக் கொடுக்கலாம். சில ஏரியாவுல ரோந்து போறதையே மறந்துட்டாங்களே... உதாரணத்துக்கு... காளப்பட்டி ரோட்டுல போனா தெரியும். பிரைவேட் காலேஜ்க்கு எதிரே ரோட்டிலேயே ஆட்டோக்களை நிறுத்துறாங்க; ரோடே லவ்வர்ஸ் பார்க் மாதிரி மாறிடுச்சு; நைட் 12 மணிக்கெல்லாம் ரோட்டுல நின்னு சண்டை போட்டுட்டு இருக்காங்க.

ஏதாச்சும் ஏடா கூடமா ஆயிடக் கூடாதுன்னு, அந்த ஏரியாக்காரங்க பயப்படுறாங்க. கஞ்சா சேல்ஸ்சும் துாள் பறக்குதாம். போலீஸ்காரங்க கண்காணிச்சு, நடவடிக்கை எடுக்கலைன்னா... பெரிய ஆபத்தா போயிடும்னு சொல்றாங்க,''

கலெக்சன் அமர்க்களம்


''பண்டிகை முடிஞ்சதும், நம்மூருக்கு சி.எம்., வரப்போறாரு... கரூர் டீம் வந்தாச்சா...''

''உடன் பிறப்புகள்கிட்ட பேசினேன். இன்னும் வரலைன்னு சொன்னாங்க. இப்போ வரைக்கும் 'டாஸ்மாக்' கலெக்ஷன் விவகாரங்களை, உள்ளூர் கட்சி நிர்வாகிகளே கவனிச்சுக்கிறாங்களாம்.

கடை சேல்ஸ்க்கு தகுந்தபடி கலெக்சன் செய்றாங்களாம்; அதாவது, 10 'பர்சன்டேஜ்' கொடுக்கணும். கேக்குற பணத்தை கொடுக்கலைன்னா... சேல்ஸ் இல்லாத கடைக்கு ஊழியர்களை 'டிரான்ஸ்பர்' செஞ்சிடுறாங்களாம். 'கலெக்சன் அமவுன்ட்' மேலிடத்துக்கும் போறதில்லையாம்; யாரோ அமுக்கிடுறாங்கன்னு, உடன்பிறப்புகள் சொல்றாங்க...''

''கலெக்ட்ரேட் அதிகாரி பெயரைச் சொல்லி, கீழ்மட்ட அதிகாரிகள் பட்டாசு கடைகள்ல, கல்லா' கட்டிட்டாங்களாமே...''

''ஆமாக்கா... எனக்கும் தகவல் வந்துச்சு. பட்டாசு கடை நடத்துறதுக்கு ஏரியா ஸ்டேஷன், ரெவின்யூ டிபார்ட்மென்ட், தீயணைப்பு துறைன்னு ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டுக்கும் 'கப்பம்' கட்ட வேண்டியிருந்துச்சாம்.

ரூரல் ஏரியாவுல கடை போடுறதுக்கு, மாவட்ட நிர்வாகத்துல இருந்து உரிமம் கொடுத்திருக்காங்க.

தாலுகா ஆபீசுல இருந்து சில ஊழியர்கள் போயி, பட்டாசு கடை உரிமையாளர்கள்கிட்ட பணம் வாங்கியிருக்காங்க. இதை கேள்விப்பட்ட டி.ஆர்.ஓ., 'என்கொயரி'யை ஆரம்பிச்சிருக்காங்களாம்,'' என்ற மித்ரா, ஆபீசரை சந்திக்க, தெற்கு தாலுகா ஆபீசுக்குள் சென்றாள்.

ஸ்கூட்டர் அருகே காத்திருந்தாள் சித்ரா.






      Dinamalar
      Follow us