/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் 9 ம்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

ADDED : டிச 05, 2025 07:10 AM
சூலூர்: கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, சூலூர் வட்டார வள மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வரும், 9 ம்தேதி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
காலை, 9:30 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கும் முகாமில், குழந்தைகள் முதல், 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேவைப்படுவோருக்கு, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். தேசிய அடையாள அட்டை, வழங்கவும், புதுப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
முகாமில், பங்கேற்போர், பிறப்பு சான்று நகல், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை ஐந்து நகல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை இருந்தால், ஐந்து நகல்கள் கொண்டு வரவேண்டும்.