/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நாளை முகாம்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நாளை முகாம்
ADDED : நவ 06, 2024 09:52 PM
பொள்ளாச்சி; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை, 8ம் தேதி நடக்கிறது.
காலை, 9:00 மணி முதல் 1:00 மணிவரை முகாம் நடத்தப்படுகிறது. இதில், கை மற்றும் கால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், காது கேட்காத மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகள், மன வளர்ச்சி குன்றியவர்கள், மூளை முடக்குவாதம், கண் பார்வை குறைபாடு உள்ள குழந்தை களுக்கு மருத்துவப்பரிசோதனைமேற்கொள்ளப்பட உள்ளது.
மாற்றுத்திறன் தன்மையின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை, தேவையான உதவி உபகரணங்கள் பெறுவதற்கான பதிவும் மேற்கொள்ளப்படுகிறது.
முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கான பதிவும் செய்யப்படவுள்ளது.