/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம்
/
தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம்
ADDED : ஜூலை 23, 2025 09:02 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கோவை தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், திண்ணை பிரசாரம் நடந்தது.
கோவை தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், திண்ணை பிரசாரம், பொள்ளாச்சி கோவில்பாளையத்தில் நடந்தது. மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சதிஷ்குமார் வரவேற்றார்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயரமான், வீடுவீடாக சென்று, அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்கள், தி.மு.க., அரசு பதவியேற்ற நான்கு ஆண்டுகளில், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களை, துண்டு பிரசுரங்களாக பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், செந்தில்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, காளிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.