/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரய ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா?
/
கிரய ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா?
ADDED : அக் 11, 2025 11:07 PM

குடும்ப வன்முறை என்றால் என்ன? அதற்கான பரிகாரங்கள் என்ன?
திருமணமான பெண்ணிற்கு, புகுந்த வீட்டில் நடக்கும் உடல் ரீதியான வன்முறை, மனரீதியான கொடுமை, திட்டுதல், தினசரி வாழ்க்கை தேவைக்கான பணம் கொடுக்காதது, பாலியல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக, ஏற்படுத்தப்பட்ட சட்டம் தான், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்.
இந்த சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் உள்ளது. அந்த நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை சட்டம் பிரிவு, 12-ன் கீழ் மனுத்தாக்கல் செய்தால், நஷ்டஈடு மற்றும் பாதுகாப்பு தொடர்பாகஉத்தரவு பிறப்பிக்க, நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
பதிவு செய்யப்பட்ட கிரைய ஆவணத்தினை ரத்து செய்ய சட்டத்தில் இடமுள்ளதா?
பதிவு செய்யப்பட்ட ஆவணத்தினை, ஏமாற்றியோ,வற்புறுத்தியோ அல்லது தவறான விளக்கத்தின் மூலமாகவோ அல்லது விற்பனை தொகையை கொடுக்காவிட்டாலோ,இந்திய ஒப்பந்த சட்டம் 1872 பிரிவு 17 மற்றும் 19-ன் கீழ் ஆவணத்தினை ரத்து செய்ய கோரி, சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யலாம்.
- வக்கீல் சண்முகம்
ரேஸ்கோர்ஸ்.