/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான தொழிலாளர் நல வாரிய நல திட்டங்கள் பயன்படுத்தலாமே
/
கட்டுமான தொழிலாளர் நல வாரிய நல திட்டங்கள் பயன்படுத்தலாமே
கட்டுமான தொழிலாளர் நல வாரிய நல திட்டங்கள் பயன்படுத்தலாமே
கட்டுமான தொழிலாளர் நல வாரிய நல திட்டங்கள் பயன்படுத்தலாமே
ADDED : செப் 08, 2025 05:59 AM
கோவை; கோவை கலெக்டர் அறிக்கை:
கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், 60 ஆயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அளிக்கப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 7 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கட்டுமான தொழில் தொடர்பான மேசன், கம்பி வளைப்பவர், தச்சுவேலை, எலக்ட்ரீசியன், பிளம்பர், வெல்டர், பெயின்டர், 'ஏசி' மெக்கானிக் உள்ளிட்ட 12 பிரிவுகளில் பணியாற்றும் 1,200 கட்டுமான தொழிலாளர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படும். நாளொன்றுக்கு 800 ரூபாய் ஊக்கத்தொகை, உணவு மற்றும் காபி வழங்கப்படும். பயிற்சிக்குபின் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.