/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முருங்கை உற்பத்தியில் மகத்தான லாபம் ஈட்டலாம்
/
முருங்கை உற்பத்தியில் மகத்தான லாபம் ஈட்டலாம்
ADDED : பிப் 15, 2025 11:00 PM
கோவை: பல்கலையின் உயிரி தொழில்நுட்ப மையத்தில், வேளாண் தொழில்நுட்ப தொழில்முனைவோர் சந்திப்பு நடந்தது.
இதில், மொரிங்கா பிராமிஸ் வெல்னஸ் ஏற்றுமதி நிறுவன தலைவர் ரஞ்சித், முருங்கை சார்ந்த பொருட்களில் தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.
முருங்கை மரத்தின் அனைத்துப் பாகங்களும், மதிப்புக்கூட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஏ, சி, ஈ, விட்டமின்கள், புரதம் உட்பட மருத்துவ குணம் நிறைந்த முருங்கையின் இலை, சந்தையின் தேவைக்கேற்ப, பொடிகள், மாத்திரை, தேநீர், சூப் இடுபொருட்களாக மாற்றப்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் திறன் கொண்ட முருங்கைக்கு, உலகளாவிய சந்தை உள்ளது. ஆரோக்கிய உணவுக்கான சந்தை விரிவடையும் நிலையில், முருங்கையின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து, வருவாய் ஈட்ட முடியும் என, கருத்தரங்கில் விளக்கப்பட்டது.
ஸ்டார்ட் அப் திட்டங்களுக்கு, நபார்டு வங்கியின் உதவி, விவசாயிகள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு, நபார்டு வங்கியின் திட்டங்கள் குறித்து, கோவை மாவட்ட மேம்பாட்டு மேலாளர் திருமலை ராவ் விளக்கினார்.
கோவை மாவட்ட திறன் மேம்பாட்டு மைய பயிற்சியாளர் லலிதா, உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய இயக்குநர் செந்தில், தாவர தொழில்நுட்பவியல் துறை தலைவர் கோகிலா தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

