sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 புகை  நடுவே தயாராகும் புரோட்டா,   தோசை சாப்பிடலாமா?

/

 புகை  நடுவே தயாராகும் புரோட்டா,   தோசை சாப்பிடலாமா?

 புகை  நடுவே தயாராகும் புரோட்டா,   தோசை சாப்பிடலாமா?

 புகை  நடுவே தயாராகும் புரோட்டா,   தோசை சாப்பிடலாமா?


ADDED : ஜன 10, 2026 05:09 AM

Google News

ADDED : ஜன 10, 2026 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பல சாலையோர உணவகங்களில், தோசை, புரோட்டா திறந்தவெளியில் தயாரிக்கப்படுகின்றன. வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு மற்றும் ஈயம் கலந்த புகை , துாசுக்கள் உணவுகளின் மீது படிவதால், அதன் தரம் கேள்விக்குரியதாகிறது.

குறிப்பாக, புரோட்டா மாவு நீண்ட நேரம் திறந்தவெளியில் பிசையப்படுவதால், காற்றில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் நச்சுக்கள் அதில் கலந்து விடுகின்றன. நீண்ட காலமாக துாசு, புகை மாசு படிந்த உணவு உட்கொள்ளும் போது நுரையீரல் பாதிப்பு, செரிமான கோளாறுகள், ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உணவு பாதுகாப்பு தர விதிமுறைகளின் படி, உணவு சமைக்கும் இடமும், பொருட்களும் முழுமையாக மூடப்பட்டு இருக்க வேண்டும். பல கடைகளில் இவ்விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் மட்டுமே உணவு தயாரிக்க வேண்டும். திறந்தநிலையில் உணவு சமைக்க கூடாது. குறைந்தபட்சம் மறைப்பு இருக்க வேண்டும். சமையல் செய்யும் இடம் உணவகத்தின் உட்புறத்தில் இருக்க வேண்டும் அல்லது சரியான மறைப்புடன் முன்புறம் செய்துகொள்ளலாம். தவறும்பட்சத்தில் உணவில் துாசு, புகை படிந்து ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்தும்.

ஆய்வுகளின் போது, திறந்தநிலையில் சமைத்தாலோ, இறைச்சியை தொங்கவிட்டாலோ கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். உணவக உரிமையாளர்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வு கூட்டங்களில், இது குறித்து உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us