தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இலக்கணம் தெரியாமல் கவிதை எழுதலாமா? தமிழ் கவிஞர்களுக்கு கல்வியாளர் கேள்வி

இலக்கணம் தெரியாமல் கவிதை எழுதலாமா? தமிழ் கவிஞர்களுக்கு கல்வியாளர் கேள்வி

இலக்கணம் தெரியாமல் கவிதை எழுதலாமா? தமிழ் கவிஞர்களுக்கு கல்வியாளர் கேள்வி


UPDATED : நவ 24, 2026 03:02 PM

ADDED : நவ 24, 2026 03:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 03:02 PM ADDED : நவ 24, 2026 03:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பூவரசி மறைமலை எழுதிய இரண்டு கவிதை நுால்கள் வெளியீட்டு விழா, தமிழ்நாடு இலக்கிய பேரவை சார்பில் ரயில்வே குடியிருப்பு பொறியாளர் அரங்கில் நடந்தது. புலவர் பொன்முடி சுப்பையன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தமிழ் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிமணியம் நுாலை வெளியிட்ட, மனோசக்தி மாசிலாமணி, குழந்தைசாமி பெற்றுக்கொண்டனர்.

கல்வியாளர் சுப்பிமணியம் பேசியதாவது:

இப்போது இலக்கணம் மாறாமல் வெண்பா மற்றும் விருத்தப்பாக்கள் எழுதுபவர்கள் குறைவு. முறையாக யாப்பு இலக்கணம் மற்றும் சங்க இலக்கிய நுால்களை படித்தவர்களால்தான் மரபு கவிதைகள் எழுத முடியும். கண்ணதாசன் புகழ் பெற்றார் என்றால், அவர் பழந்தமிழ் இலக்கியங்களை சிறப்பாக படித்ததால்தான் முடிந்தது. கவிதையில் சாதனை படைத்தவர்கள் தமிழை முறையாக படித்தவர்கள்.

இந்த நுாலாசிரியர் சந்தம், ஓசை நயம் மாறாமல், சமூக கருத்துகள் உள்ள மரபு கவிதைகளை எழுதி இருக்கிறார். இன்றைக்கு இளைஞர்கள் புதுக்கவிதைகள் அதிகம் எழுதுகின்றனர். பொதுவாக கவிஞர்கள் தமிழ் இலக்கணத்தை முறையாக கற்றுக்கொண்டு, தமிழ் மொழியில் புலமை உள்ளவர்களாக தங்களை தகுதிப்படுத்தி கொண்ட பிறகுதான் கவிதை எழுத வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். கவிஞர்கள் ரவீந்திரன், உமா மகேஸ்வரி, தமிழ் மாணிக்கம் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.…படம் அருள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us