/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டை விட உயரமாக கால்வாய் அமைப்பு! குடியிருப்பு பகுதி மக்களுக்கு பாதிப்பு
/
ரோட்டை விட உயரமாக கால்வாய் அமைப்பு! குடியிருப்பு பகுதி மக்களுக்கு பாதிப்பு
ரோட்டை விட உயரமாக கால்வாய் அமைப்பு! குடியிருப்பு பகுதி மக்களுக்கு பாதிப்பு
ரோட்டை விட உயரமாக கால்வாய் அமைப்பு! குடியிருப்பு பகுதி மக்களுக்கு பாதிப்பு
ADDED : டிச 23, 2024 10:05 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்வாயால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு ஒன்றியம், சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலாம்பாளையம் பகுதியில், ரேஷன் கடை அருகே உள்ள கால்வாயில் கழிவுநீர் அடிக்கடி தேங்கி, ரோட்டில் வழிந்தோடி வந்தது.
குறிப்பாக, மழை காலத்தில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து ரோட்டில் செல்வதால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும், கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, புதிதாக கால்வாய் அமைக்க, 15வது நிதிக்குழுவில் இருந்து, 8.44 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.
ஆனால், பழைய கால்வாய் இருந்த இடத்தை முழுவதுமாக மூடிவிட்டு, அதன் மேல் பகுதியில் புதிதாக கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
கால்வாய் பிரச்னை பல வருடங்களாக இருந்து வந்தது. தற்போது, புதிதாக கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருவதால் மக்கள் பலர் நிம்மதி அடைந்தனர். மேலும், பழைய கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட பகுதியை சுத்தம் செய்து சீரமைக்கப்படும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், அந்தக் கால்வையை மூடிவிட்டு அதன் மேல் பகுதியில் புதிதாக ஒரு கால்வாய் தற்போது கட்டி வருகின்றனர். இதனால், இந்த கால்வாய் ஓரம் உள்ள வீடுகளில், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில பகுதியில் ரோடு மட்டத்தை விட கால்வாய் உயரமாக உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ரோடு தாழ்வாக உள்ள பகுதிகளில், ரோட்டின் மட்டத்தை உயர்த்த வேண்டும். இதற்கு, ஒன்றிய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'முன்பிருந்த கால்வாயில், மழைநீர் அதிகமாக வழிந்தோடும் போது, கழிவு நீருடன் கலந்து ரோட்டுக்கு வந்தது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
மேலும், இப்பகுதி சற்று பள்ளமாக இருப்பதால், மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாயை ரோடு மட்டத்தில் இருந்து சற்று உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. வருங்காலத்தில், கால்வாய் மட்டத்துக்கு ஏற்ப, சில பகுதிகளில் ரோட்டை உயர்த்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.