/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனரா வங்கி வீட்டுக்கடன் கண்காட்சி துவக்கம்
/
கனரா வங்கி வீட்டுக்கடன் கண்காட்சி துவக்கம்
ADDED : பிப் 04, 2024 12:05 AM
கோவை:கனரா வங்கியின் வீட்டுக்கடன் கண்காட்சி, திருச்சி சாலையிலுள்ள வெங்கடலட்சுமி திருமணமண்டபத்தில் நேற்று துவங்கியது.
கண்காட்சியை, கனரா வங்கி பிராந்திய துணை பொது மேலாளர் ஷோபித்ஆஸ்தானா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் வீடு வாங்குவதற்கு, கட்டுவதற்கு, அடமானக்கடன் பலருக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கப்பட்டது. மூன்று மாத சம்பள சான்று, சுயதொழில் செய்வோர் கடைசி மூன்று ஆண்டுகளுக்கான வருமானவரிச்சான்று ஆகியவற்றை சமர்ப்பித்து பலரும், பரிசீலனை கட்டணம் இன்றி 8.40 சதவீத வட்டிவிகிதத்தில் வழங்கப்பட்டது.
25க்கும் மேற்பட்ட முன்னணி பில்டர்கள் பங்கேற்றனர். தனி வீடுகள், பங்களாக்கள், அபார்ட்மென்ட்டுகள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
உடனடியாக குடிபுக தயாராக உள்ள வீடுகளை பலரும் தேர்வு செய்தனர். அங்குள்ள வக்கீல்களிடம் இலவசமாக சட்ட ஆலோசனையும் பெற்றனர்.
சென்னை கனரா வங்கி வட்ட அலுவலக உதவி பொது மேலாளர் கார்த்திகேயன், கோவை கனராவங்கி பிராந்திய அலுவலக உதவி பொது மேலாளர் சதீஷ்குமார், கோட்ட 1 மேலாளர் சிந்து, கனராவங்கி கோட்ட 2 மேலாளர் சரத் பி உதயசங்கர். சாய் யு.வி.ஆர் நிறுவன நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார், தியா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர். கண்காட்சி இன்றும் நடக்கிறது.