/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்; மூவர் கைது
/
கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்; மூவர் கைது
ADDED : ஜூன் 05, 2025 01:25 AM
கோவை; இருவேறு இடங்களில் கஞ்சா, போதைமாத்திரைகள் விற்பனை செய்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.
* உக்கடம், வின்சென்ட் ரோடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் ரோந்து சென்ற போது, அப்பகுதியில் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, இருசக்கர வாகனம் பழுதாகிவிட்டதால் நிற்பதாக தெரிவித்துள்ளனர்.
சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது, 150 கிராம் கஞ்சா பொட்டலம் கிடைத்தது. அவர்களிடம் இருந்த கஞ்சா, மொபைல், பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இருவரையும் உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் போத்தனுார் மேட்டூரை சேர்ந்த பாலசுப்ரமணி, 30 மற்றும் சுந்தராபுரத்தை சேர்ந்த ஜாபர் சாதிக், 30 ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
* சங்கனுார் சாலையில் வலி நிவாரணி மாத்திரைகளை, போதைக்காக பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கவுண்டம்பாளையம் போலீசார் அங்கு சென்று விசாரித்த போது ரத்தினபுரியை சேர்ந்த மணிகண்டன், 40 என்பவர் போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை, விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 53 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.