/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரினிட்டி கண் மருத்துவமனையில் கான்டோரா லாசிக் சிகிச்சை மையம்
/
டிரினிட்டி கண் மருத்துவமனையில் கான்டோரா லாசிக் சிகிச்சை மையம்
டிரினிட்டி கண் மருத்துவமனையில் கான்டோரா லாசிக் சிகிச்சை மையம்
டிரினிட்டி கண் மருத்துவமனையில் கான்டோரா லாசிக் சிகிச்சை மையம்
ADDED : ஏப் 16, 2025 10:23 PM

கோவை; ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள, டிரினிட்டி கண் மருத்துவமனையில், அதிநவீன கான்டோரா லாசிக் இயந்திர சிகிச்சை மைய திறப்பு விழா, நேற்று நடந்தது. நடிகை மீனா மையத்தை திறந்துவைத்தார்.
நிகழ்வில், மருத்துவ இயக்குனர் முதுநிலை கண் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் முகமது ஷபாஷ் கூறுகையில், ''இப்புதிய நவீன இயந்திரம் வாயிலாக, லேசர் சிகிச்சை நவீன முறையில் மேற்கொள்ள இயலும்.
தொடுதல், ரத்தம் இன்றி எளிதாக, துல்லியமாக சிகிச்சை மேற்கொள்ளலாம். சிகிச்சை முடிந்த அடுத்த நாட்களில், வழக்கமான பணிக்கு திரும்பிவிட முடியும். கிட்டப்பார்வை, துாரப்பார்வை, பிற பார்வை குறைபாடுகளை எளிதாக சரிசெய்து விடலாம்,'' என்றார்.
நிகழ்வில், பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் சுப்பாராவ், மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதர், இயக்குனர் டாக்டர் மிருதுளா சுனில், டிரினிட்டி கண் மருத்துவ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாஸ்மின், மருத்துவ செயல் இயக்குனர் டாக்டர் மதுசூதனன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.