ADDED : செப் 23, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
கோவை: கேப் ஜெமினி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பிரான்ஸ் நாட்டை தலைமையிடாக கொண்டுள்ளது. பல நாடுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்தியாவின் பல நகரங்களில் கிளைகள் உள்ளன. 2018ம் ஆண்டு முதல் கோவை உடையாம்பாளையத்தில் செயல்பட்டது.
விளாங்குறிச்சியில் உள்ள எல்காட் ஐ.டி., பார்க் வளாகத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தை அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.,க்கள் சஞ்ஜய் சால்க், கார்த்திக் ராமகிருஷ்ணா திறந்து வைத்தனர்.
1.37 லட்சம் சதுரடியில் செயல்படும். 1,500க்கும் மேற்பட்டோர் பணியாற்ற முடியும். இன்ஜினியரிங், ரோபோடிக்ஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும். கோவை ஐ.டி. துறை வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்று தொழில்துறையினர் தெரிவித்தனர்.
