ADDED : நவ 22, 2024 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையில் ஓடிக்கொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்தில் இருந்து இரு பயணியரை ஏற்றிக் கொண்டு அவிநாசி ரோட்டில் கார் ஒன்று வந்தது. சி.ஐ.டி., கல்லுாரி அருகே வந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது.
இதையடுத்து, டிரைவர் காரை நிறுத்தினார். பயணியர் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர். அதற்குள் காரில் தீப்பரவியது. தகவலறிந்து அங்கு சென்ற பீளமேடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விசாரணையில், காரின் உரிமையாளர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த, விஜய் பாலாஜி எனத் தெரிந்தது. காரை டிரைவர் முரளிதரன் ஓட்டி வந்துள்ளார். பேட்டரியில் ஏற்பட்ட கோளாறால் கார் திடீரென தீப்பிடித்துள்ளது.