/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுப்பாடு இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி எரிந்தது
/
கட்டுப்பாடு இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி எரிந்தது
கட்டுப்பாடு இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி எரிந்தது
கட்டுப்பாடு இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி எரிந்தது
ADDED : ஏப் 06, 2025 09:47 PM

- நமது நிருபர் -
கட்டுப்பாடு இழந்த கார், தடுப்பு சுவர் மற்றும் மரத்தில் மோதி எரிந்து கருகியது.
பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 25. இவர் தனது நண்பர்கள் ரமேஷ், சங்கர் ஆகியோருடன், பொள்ளாச்சியில் இருந்து, பூ கொள்முதல் செய்ய, நேற்று அதிகாலை, ஈரோடு மாவட்டம், சத்திக்கு சென்று கொண்டு இருந்தார்.
அன்னுார் அடுத்த பட்டறை அருகே செல்லும்போது, கட்டுப்பாடு இழந்த கார் ரோட்டோர தடுப்புச் சுவரிலும் புளிய மரத்திலும் மோதி கவிழ்ந்தது. இதில் கார் தீ பிடித்தது. இதை பார்த்து காரில் இருந்த மூவரும் இறங்கி காயத்துடன் தப்பினர்.
அன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில், ஆறு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் காரின் பெரும்பகுதி எரிந்து கருகியது. ஜெகநாதனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. ரமேஷின் கால் முறிந்தது. சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மூவரும் அன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

