/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.40 லட்சம் மாயம்; பெண் மீது வழக்கு
/
ரூ.40 லட்சம் மாயம்; பெண் மீது வழக்கு
ADDED : ஏப் 26, 2025 07:20 AM
கோவை; கோவை, அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் கலாவதி, 43; இவரது கணவர் கடந்த 2017ம் ஆண்டு உயிரிழந்தார். கலாவதி வீட்டில் செல்வபுரத்தை சேர்ந்த நதியா, 28 என்பவர் பணியாற்றி வந்தார். கலாவதியின் கணவர் இறந்ததால், அவரின் இன்சூரன்ஸ் பணம் கலாவதிக்கு வந்தது.
தனது பழைய வீட்டை ரூ.26 லட்சத்துக்கு விற்பனை செய்தார். சேர்த்து வைத்திருந்த பணம் என ரூ.40 லட்சத்தை தனது வீட்டு படுக்கையறையில் உள்ள, ஒரு பெட்டியில் வைத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த, 16ம் தேதி பெட்டியை கலாவதி திறந்தார். பெட்டியில் இருந்த பணம் மாயமாகியிருந்தது.
இது குறித்து, செல்வபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், நதியா பணத்தை திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் நதியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

