/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெரு நாய்களுக்கு விஷம் வைத்தவர்கள் மீது வழக்கு
/
தெரு நாய்களுக்கு விஷம் வைத்தவர்கள் மீது வழக்கு
ADDED : பிப் 18, 2025 11:29 PM
கோவை; இடையர்பாளையம் பகுதியில், தெரு நாய்களுக்கு விஷம் வைத்த மூவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை, இடையர்பாளையம் பகுதியில் தெரு நாய்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. அதில் ஒரு நாயின் உடலில், விஷம் கலந்திருந்ததால் உயிரிழந்தது. தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த மேலும் சில தெரு நாய்களும் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், சம்பவம் குறித்து விலங்குகள் நல ஆர்வலர் கவுதம் ஸ்ரீநிவாசன், கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் அப்பகுதியில் வசிக்கும், யாசிம் சையது, துரைராஜ், ராம்ராஜ் ஆகியோர் நாய்களுக்கு விஷம் வைத்தது தெரியவந்தது. போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

