/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படம் பா.ஜ.,வினர் மீது வழக்குப்பதிவு
/
டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படம் பா.ஜ.,வினர் மீது வழக்குப்பதிவு
டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படம் பா.ஜ.,வினர் மீது வழக்குப்பதிவு
டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படம் பா.ஜ.,வினர் மீது வழக்குப்பதிவு
ADDED : மார் 20, 2025 11:41 PM
அன்னுார்: டாஸ்மாக் கடையில் முதல்வர் படத்தை ஒட்டிய பா.ஜ.,வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி போராட்டம் நடத்த முயன்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்பட பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ மாட்டப்படும் என அண்ணாமலை அறிவித்தார்.
அன்னுாரில் பாஜ., இளைஞரணி நிர்வாகி பானு ரமேஷ் தலைமையில் பா.ஜ.,வினர் ஓதிமலை ரோட்டில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டினர்.
'டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முறைகேட்டில் ஈடுபட்ட தமிழக அரசு பதவி விலக வேண்டும்,' என வலியுறுத்தினர். உடனே போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் வந்ததையடுத்து பா.ஜ.,வினர் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், அன்னுார் போலீசார் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படத்தை ஒட்டிய பா.ஜ.,வினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.