/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி; சதம் விளாசிய 'மிராக்கிள்' வீரர்
/
சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி; சதம் விளாசிய 'மிராக்கிள்' வீரர்
சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி; சதம் விளாசிய 'மிராக்கிள்' வீரர்
சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி; சதம் விளாசிய 'மிராக்கிள்' வீரர்
ADDED : ஆக 13, 2025 09:09 PM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் நான்காவது டிவிஷன் போட்டி எஸ்.ஆர்.ஐ.ஐ., பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகிறது. மிராக்கிள் கிரிக்கெட் கிளப் அணியும், எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, மிராக்கிள் கிரிக்கெட் கிளப் அணியினர், 50 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 274 ரன் எடுத்தனர். வீரர்கள் கார்த்திக், 112 ரன்களும், ராகுல் பிரணவ், 69 ரன்னும், ஜீவானந்தம், 43 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய, எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர், 33 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 158 ரன் எடுத்தனர். வீரர்கள் நல்லதம்பி, 45 ரன், கார்த்திக் குமார், 41 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் ரஞ்சித் மூன்று விக்கெட்கள் எடுத்தார். மழை காரணமாக, 33 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.