/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் போட்டி; அக் ஷயா, ஏ.எஸ்.பி., அணியினர் வெற்றி
/
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் போட்டி; அக் ஷயா, ஏ.எஸ்.பி., அணியினர் வெற்றி
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் போட்டி; அக் ஷயா, ஏ.எஸ்.பி., அணியினர் வெற்றி
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் போட்டி; அக் ஷயா, ஏ.எஸ்.பி., அணியினர் வெற்றி
ADDED : ஜூன் 30, 2025 10:49 PM
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், ஐந்தாவது டிவிஷன் போட்டி சி.ஐ.டி., பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகிறது. அக் ஷயா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியும், பெனடிக் போர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
பேட்டிங் செய்த அக் ஷயா அணியினர், 50 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 246 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் ஆன்டனி ராபின்ஸ், 59 ரன்களும், விமல், 33 ரன்களும், ஆசிப் அகமது, 30 ரன்களும் எடுத்தனர். அடுத்து விளையாடிய பெனடிக் போர்ஸ் அணியினர், 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 99 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
எதிரணி வீரர்கள் செந்தில்குமார், அஷ்வித் ஆகியோர் தலா நான்கு விக்கெட்கள் வீழ்த்தி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். ஆறாவது டிவிஷன் போட்டியில், பி.எஸ்.ஜி., டெக்., கிரிக்கெட் கிளப் அணியும், ஏ.எஸ்.பி., என்டர்பிரைசஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பி.எஸ்.ஜி., அணியினர், 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 172 ரன்கள் எடுத்தனர்.
வீரர் கோபிநாதன், 52 ரன்களும், ஹரிதேவ், 40 ரன்களும் எடுத்தனர். ஏ.எஸ்.பி., அணியினரோ, 48.2 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 173 ரன்கள் எடுத்தனர்.
வீரர்கள் தனஜெய், 74 ரன்களும், துவாரக பிரசாத், 37 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் பூபாலன் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து போட்டிகள் நடந்துவருகின்றன.