/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நூற்றாண்டு கண்ட அரசு துவக்க பள்ளி
/
நூற்றாண்டு கண்ட அரசு துவக்க பள்ளி
ADDED : ஆக 29, 2025 10:17 PM
சூலுார்; சூலுார் தெற்கு அரசு துவக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
சூலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (தெற்கு), கடந்த, 1924ம் ஆண்டு துவக்கப்பட்டது. பல சான்றோர்கள், ஆன்றோர்களை உருவாக்கிய பெருமை கொண்ட இப்பள்ளி, நூறு ஆண்டுகளை எட்டியுள்ளது. முன்னாள் மாணவர் மன்றம் மற்றும் நூற்றாண்டு விழாக்குழு சார்பில், நூற்றாண்டு நிறைவு விழா நேற்று நடந்தது.
மன்னவன் தலைமை வகித்தார். நூற்றாண்டு விழா மலரை, எம்.பி., கணபதி ராஜ்குமார் வெளியிட, பேரூராட்சி தலைவர் தேவி, வட்டார கல்வி அலுவலர்கள் தன்னாசி, ஸ்ரீ கலா, செந்தலை கவுதமன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பரிசுகள் வழங்கப்பட்டன.
பேரூராட்சி துணைத் தலைவர் கணேஷ், தலைமையாசிரியர் மார்க்கிரேட், முன்னாள் மாணவர் மன்ற செயலாளர் கருணாநிதி மற்றும் முன்னாள் மாணவ, மாணவியர் பங் கேற்றனர்.