/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய வேளாண் திட்ட விழிப்புணர்வு முகாம் வரும் 12ம் தேதி வரை நடக்குது
/
மத்திய வேளாண் திட்ட விழிப்புணர்வு முகாம் வரும் 12ம் தேதி வரை நடக்குது
மத்திய வேளாண் திட்ட விழிப்புணர்வு முகாம் வரும் 12ம் தேதி வரை நடக்குது
மத்திய வேளாண் திட்ட விழிப்புணர்வு முகாம் வரும் 12ம் தேதி வரை நடக்குது
ADDED : ஜூன் 09, 2025 09:48 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்று பகுதிகளில், மத்திய அரசின் வேளாண் திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கோவை மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் வாயிலாக, விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் வேளாண் சார்ந்த பயிற்சிகள், விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வளர்ச்சி அடைந்த வேளாண் பிரசார இயக்கம் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம், கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையம், இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய உர கூட்டுறவு லிமிடெட், ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, கடந்த, மே 29 முதல், வரும், 12ம் தேதி வரை விழிப்புணர்வு முகாம் நடத்துகிறது.
கோவை மாவட்டத்தில், அனைத்து வட்டாரங்களிலும் இருக்கும் முன்னோடி கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, நன்மை அளிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் உள்ள புரவிபாளையம், ஆச்சிபட்டி மற்றும் ஆர்.பொன்னாபுரம் ஆகிய கிராமங்களில் முகாம் நடந்தது. வேளாண் அறிவியல் நிலையத்தின் மண்ணியல் வல்லுநர் சுகந்தி, தோட்டக்கலை வல்லுநர் சகாதேவன் மற்றும் ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் பவித்ரா முன்னிலை வகித்தனர்.
இதில், கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலைய அதிகாரி கோமதி, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் (கோவை) அதிகாரி சங்கரநாராயணன், இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவன (ஹைதராபாத்) அதிகாரி பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, மத்திய, மாநில அரசின் திட்டங்கள், விவசாயிகளுக்கு காரீப் பருவ கால நிலைக்கு ஏற்ப புதிய ரகங்கள், தொழில்நுட்பங்கள், தென்னையில் உர மேலாண்மை, களை மேலாண்மை, வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறைகளையும் மற்றும் தென்னை டானிக் குறித்த தகவல்களை தெரிவித்தனர்.