/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு
/
மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு
ADDED : டிச 03, 2024 06:34 AM

கருமத்தம்பட்டி; வாகராயம்பாளையத்தில், உயிர் சமூக சேவை மையத்தின் சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டது.
உயிர் சமூக சேவை மையத்தின் சார்பில், மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள மருந்தகத்தை மருத்துவர் விஜயகிரி திறந்து வைத்தார்.
முன்னாள் மருத்துவ அலுவலர் அன்பழகன், சேவை மையத்தின் நிர்வாக அறங்காவலரும், மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவருமான சசிக்குமார், பொன்னுசாமி, அரவிந்தன், அபிராமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குறைந்த விலையில், தேவையான அனைத்து மருந்துகளும் மக்களுக்கு இந்த மருந்தகத்தில் கிடைக்கும், என, உயிர் சமூக சேவை மையத்தினர் கூறினர்.