/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கர்ப்பப்பை கட்டியா? கவலை வேண்டாம்!
/
கர்ப்பப்பை கட்டியா? கவலை வேண்டாம்!
ADDED : ஆக 09, 2024 01:58 AM
கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், வரும் 31ம் தேதி வரை நடக்கும், கர்ப்பப்பை கட்டி கண்டறியும் முகாமில், சலுகை கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கே.எம்.சி.எச்., நிர்வாகத்தினர் கூறியதாவது:
மாதவிடாய் பிரச்னைகள் சாதாரணமாக இருந்தாலும், இதை அலட்சியப்படுத்தக்கூடாது. இக்காலங்களில், சிலருக்கு அதிக வலி, அதிகளவில் உதிரப்போக்கு இருக்கும். சிலருக்கு சிறுநீர், மலம் கழிப்பதில சிரமம், அடிவயிற்றில் எப்போதும் நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருத்தால் கர்ப்பப்பை கட்டிக்கான அறிகுறிகளாகும்.
இது சாதாரணமாக காணப்படும், ஒரு புற்றுநோய் அல்லாத கட்டிதான். இருப்பினும், மாதவிடாய் பிரச்னைகளால் இதை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே, சிறிய பிரச்னையாக இருந்தாலும், அதை தீர்க்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் எவ்வித தொந்தரவும் இருக்காது.
கர்ப்பப்பையில் பிரச்னை என்றால், அதை அகற்றி விடலாம் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம். எளிதாக குணப்படுத்தக்கூடிய இக்கட்டியை, தழும்புகள் இன்றி, சிகிச்சை செய்த சுவடே தெரியாமல், ஆஞ்சியோகிராம் முறையில் குணப்படுத்தலாம்.
கர்ப்பப்பை கட்டியால் ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சையின்றி, எளிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், இச்சிகிச்சைக்கான அதிநவீன கருவிகள், வசதிகள் உள்ளன.
மருத்துவமனை கதிர்வீச்சியல் துறையில் வரும் 31ம் தேதி வரை, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில், தினமும் காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை கர்ப்பப்பை கட்டி கண்டறியும் முகாம் நடக்கிறது. சலுகை கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது; மருத்துவரின் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.