/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு ;பஸ்சில் பயணிப்போர் பத்திரம்
/
மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு ;பஸ்சில் பயணிப்போர் பத்திரம்
மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு ;பஸ்சில் பயணிப்போர் பத்திரம்
மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு ;பஸ்சில் பயணிப்போர் பத்திரம்
ADDED : நவ 13, 2025 12:46 AM
கோவை: சின்னியம்பாளையம் கிருஷ்ணா கவுண்டர் தெருவை சேர்ந்தவர் இந்திராணி, 73. நேற்று முன்தினம் அரசு பஸ்சில் மலுமிச்சம்பட்டியில் இருந்து டவுன்ஹாலுக்கு வந்தார். அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், இந்திராணியிடம் அவர் அணிந்திருந்த நான்கு பவுன் செயின் ஒரு இடத்தில் அறுந்து இருப்பதாகவும், அணிந்திருந்தால் விழுந்து விடும் எனவும் தெரிவித்தார். இந்திராணி செயினை கழற்றி கைப்பையில் வைத்தார். டவுன்ஹால் பிரகாசம் பஸ் ஸ்டாப்பில் இறங்க முயன்றார்.
பஸ்சில் இருந்து இறங்கும் போது கூட்டமாக இருந்ததால், அவர் பின்னால் நின்ற பெண் அவரது கையை பிடித்துக் கொண்டார்.அப்போது மற்றொரு பெண், அவரை கீழே தள்ளி உள்ளார். இந்திராணி கீழே விழுந்தார். எழுந்த பின் கைப்பையை பார்த்தார்.நான்கு பவுன் செயின் மாயமாகியிருந்தது.
புகாரின்படி, பெரிய கடை வீதி போலீசார் வழக்கு பதிந்து, இரு பெண்களை தேடி வருகின்றனர்.
* எஸ்.என்.பாளையம் திலகர் வீதியைச் சேர்ந்தவர் விஜயா, 63. நேற்று முன்தினம், ஆனைக்கட்டியில் உள்ள திருவள்ளுவர் நகர் சாய்பாபா கோயிலுக்கு சென்று விட்டு, மீண்டும் பஸ்சில் வீடு திரும்பினார். தடாகம் ரோடு, பால் கம்பெனி நிறுத்தத்தில் இறங்கினார். அங்கிருந்து மீண்டும் வேறு ஒரு பஸ்சில் ஏறி வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அவரது ஐந்து பவுன் செயின் மாயமாகி இருந்தது. விஜயா அளித்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

