/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் உணவு பாதுகாப்பு கருத்தரங்கு
/
வேளாண் பல்கலையில் உணவு பாதுகாப்பு கருத்தரங்கு
ADDED : நவ 13, 2025 12:46 AM
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பயிர் நோயியல் துறை மற்றும் பயிர் பாதுகாப்பு மையம், பிரான்சின் ரென்னஸ் ஆங்கர்ஸ் வேளாண் நிறுவனத்துடன் இணைந்து, தாவர நோய்கள், உணவுப் பாதுகாப்பு, உணவு கிடைப்புறுதி குறித்த மூன்று நாள் கருத்தரங்கு துவங்கியது.
பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். டில்லி, இந்தோ பிரான்ஸ் மேம்பட்ட ஆராய்ச்சி மைய இயக்குநர் நிதின் சேத், பயிர் நோயியல் துறை தலைவர் அங்கப்பன் ஆகியோர், இந்தியா பிரான்ஸ் இணை ஆராய்ச்சி முயற்சிகள், வேளாண் சவால்களைச் சமாளிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதை வலியுறுத்தினர்.
மூன்று நாள் கருத்தரங்கில், தாவர ஆரோக்கிய மேலாண்மை, உணவுப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கான நிலைத்த தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 25 முக்கிய ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
ஊட்டி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் கவிதா, இந்திய ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா, பிரெஞ்சு ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஹமெலின் உள்ளிட்டோர் துவக்க நிகழ்வில் பங்கேற்றனர்.

