ADDED : ஜூலை 20, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை,: போத்தனுார் ரயில்வே யார்டு பணிகள் நடப்பதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, வரும் 22ம் தேதி கண்ணுார் - கோவை(16607) எக்ஸ்பிரஸ் ரயில், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில், கோவை - கண்ணுார்(16608) எக்ஸ்பிரஸ் ரயில், பாலக்காட்டில் இருந்து மாலை 3:10 மணிக்கு புறப்படும்.அதேபோல், மதுரை - கோவை(16722) எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் கோவை - மதுரை(16721) எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சியில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.