/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் மாற்றம்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் மாற்றம்
ADDED : ஜூலை 02, 2025 11:41 PM
அன்னுார்; அன்னுார் தாலுக்காவில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அன்னுார் தாலுகாவில், அன்னுார் தெற்கு, வடக்கு, எஸ்.எஸ்.குளம் ஆகிய மூன்று உள் வட்டங்களில், 30 வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் பிறப்பித்த உத்தரவில், அன்னுார் தாலுகாவில் பணிபுரியும் 30 கிராம நிர்வாக அலுவலர்களில், 12 பேர் வேறு தாலுகாக்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் கோவை வடக்கு தாலுகாக்களில் இருந்து 12 பேர் அன்னுார் தாலுகாவில் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்னுார் தாலுகாவில் பணி புரிந்த 18 கிராம நிர்வாக அலுவலர்கள் அதே தாலுகாவில் வெவ்வேறு வருவாய் கிராமங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அன்னுார் கிராம நிர்வாக அலுவலர் பிரபு, ஒட்டர்பாளையத்துக்கும், அங்கு பணிபுரிந்து வந்த அழகிரிசாமி மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
எஸ்.எஸ்.குளம் கிராம நிர்வாக அலுவலர் அறிவுடை நம்பி, கரியாம்பாளையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.