/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாரல் மழை; துளிர் விடுகிறது தேயிலை
/
சாரல் மழை; துளிர் விடுகிறது தேயிலை
ADDED : நவ 08, 2024 11:41 PM

வால்பாறை; வடகிழக்குப்பருவ மழை சாரல்மழையாக பெய்து வரும் நிலையில், தேயிலை செடிகள் துளிர்விடத்துவங்கியுள்ளன.
வால்பாறை மலைப்பகுதியில், தேயிலை தொழில் மிக முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள, 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு கடந்த ஜூன் மாதம் முதல் செப்., மாதம் வரை தென்மேற்குப்பருவ மழை தொடர்ந்து பெய்து வந்ததால், தேயிலைச்செடிகள் துளிர்விட முடியாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தற்போது வடகிழக்குப்பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சாரல்மழைமட்டுமே பொழிகிறது. இடையிடையே வெயில் நிலவுவதால், எஸ்டேட் பகுதியில் தேயிலைச்செடிகள் மீண்டும் துளிர்விட்டுள்ளதோடு, உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இதனால் தேயிலை விவசாயிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'பருவ மழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தேயிலை உற்பத்தியும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு, 40 கிலோ முதல் 60 கிலோ வரை தேயிலை பறிக்கின்றனர்' என்றனர்.