ADDED : நவ 04, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
ஆனைகட்டி: ஆனைகட்டி தூவைப்பதி மலை கிராமத்தில் வசித்தவர் பொன்னுசாமி,40; கூலி தொழிலாளி.
திருமணம் இல்லை. தனது தாயார் பாப்பாளுடன் வசித்து வந்தார். நேற்று (நவ.,3) இரவு, 10.00 மணிக்கு வீட்டுக்கு வந்த பொன்னுசாமி, தனது மொபைல் போனுக்கு சார்ஜ் செய்ய வீட்டில் உள்ள ஜங்ஷன் பாக்சில் சார்ஜரை இணைத்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் பொன்னுசாமியின் மார்பில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
