/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்றப்பத்திரிக்கை தயாரிப்பு தீவிரம்
/
குற்றப்பத்திரிக்கை தயாரிப்பு தீவிரம்
ADDED : டிச 11, 2025 05:03 AM
கோவை: மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், இரண்டாம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம், 2ம் தேதி இரவு கோவை விமான நிலையம் பின்புறம் கல்லுாரி மாணவி மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றவாளிகள் சதீஸ், 30, கார்த்திக், 21, குணா, 20 ஆகிய மூவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். மூவரையும் கஸ்டடி எடுத்த போலீசார் விசாரித்தனர்.
பாலியல் பலாத்கார வழக்கை, கூடுதல் மகிளா நிதிமன்ற நீதிபதி சிந்து விசாரித்து வருகிறார். இவ்வழக்கில், 50 பக்க முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை கடந்த டிச., 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் இரண்டாவது குற்றப்பத்திரிக்கை, தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'டி.என்.ஏ., உள்ளிட்ட ஆய்வகப் பரிசோதனைகள் கிடைத்தால் மட்டுமே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அவற்றை விரைந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

