/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 13ம் தேதி நடக்கிறது தனியார் வேலை வாய்ப்பு முகாம்
/
வரும் 13ம் தேதி நடக்கிறது தனியார் வேலை வாய்ப்பு முகாம்
வரும் 13ம் தேதி நடக்கிறது தனியார் வேலை வாய்ப்பு முகாம்
வரும் 13ம் தேதி நடக்கிறது தனியார் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : டிச 11, 2025 05:04 AM
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இம்மாதம், 13ம் தேதி நடக்கிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.
இதில், 250க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நபர்களை தேர்வு செய்கின்றனர். அனுமதி இலவசம்.
முகாமில் பங்கேற்க, 8ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்துள்ளவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் பங்கேற்று பயன் பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.