/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் 17 'பெட்ரோல் பங்க்'குகளில் அனுமதி
/
மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் 17 'பெட்ரோல் பங்க்'குகளில் அனுமதி
மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் 17 'பெட்ரோல் பங்க்'குகளில் அனுமதி
மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் 17 'பெட்ரோல் பங்க்'குகளில் அனுமதி
ADDED : டிச 11, 2025 05:09 AM
பொள்ளாச்சி: மின்சார வாகனங்களை எளிதில் சார்ஜ் செய்வதற்காக பொள்ளாச்சியில், 17 'பெட்ரோல் பங்க்'குகளில் 'சார்ஜிங்' மையம் அமைக்க மின்வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பைத்தடுக்கும் விதமாக, பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக பேட்டரியில் ஓடும் வாகனங்கள், சி.என்.ஜி., எரிவாயுவில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறித்தி வருகிறது.
அவ்வகையில், பலரும், மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி, பெருநகரங்களை பொறுத்தமட்டில், மின்சார வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் செய்வதற்கு, தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு, 25 கி.மீ., துாரம், நகரங்களில் ஒவ்வொரு 3 கி.மீ., துாரத்திற்கு ஒரு சார்ஜிங் மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய, 'பெட்ரோல் பங்க்'குகள் போன்றவற்றில், 'சார்ஜிங்' மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், பொள்ளாச்சியில் 10 பெட்ரோல் பங்க்குளில் சார்ஜிங் மையம் அமைக்க மின்வாரியத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்வாரியத்தின் பசுமை எரிசக்தி கழகத்துடன் இணைந்து சார்ஜிங் மையம் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கான இணைப்புக்கு, டாரிப் 7 பெறப்பட்டு, தனியாக 112 கிலோவாட் மின் சப்ளை வழங்கப்படுகிறது.
இதுவரை, 10 'பெட்ரோல் பங்க்'குகளில் சார்ஜிங் மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனியும் கூடுதலக 7 'பெட்ரோல் பங்க்'குகளுக்கு சார்ஜிங் மையம் அமைக்கும் பணி செயல்முறையில் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

