/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒருவர் கூட விடுபட்டு விடாமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கணும்; சூலுார் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவுறுத்தல்

UPDATED : டிச 11, 2025 09:10 AM
ADDED : டிச 11, 2025 05:09 AM

சூலூர்: பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப வழங்க, இன்று கடைசி நாள். இதற்கிடையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சூலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
சூலூர் தொகுதி நோடல் அதிகாரி முருகேசன் தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் நாட்ராயன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் அரச குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சூலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெகநாதன் பேசியதாவது:
தொகுதியில், படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி, 95 சதவீத முடிந்துள்ளது. இடம் பெயர்ந்தோர், இரட்டை பதிவு, இறந்த வாக்காளர்களின் பட்டியல் அரசியல் கட்சி பூத் ஏஜென்டுகளிடம் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதி பி.எல்.ஓ.,விடம் அப்பட்டியலை கொண்டு சரிபார்க்க வேண்டும். ஏதாவது மாற்றங்கள் இருப்பின் பி. எல்.ஓ., விடமும், எங்களிடமும் தகவல் அளிக்கலாம்.
ஒருவர் கூட விடுபட்டு விடாமல், வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும், என்பதே அனைவரும் நோக்கமாக இருக்க வேண்டும். நாளை( இன்று) மாலை வரை, உங்களிடம் வழங்கிய பட்டியலை சரிபார்த்து தகவல் அளிக்கலாம். இப்பணியில் உங்கள் ஒத்துழைப்பு அவசியம் .
இவ்வாறு, அவர் பேசினார்.