/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரவுண்டானாக்கள் அழகுப்படுத்த புதர்கள் அகற்றும் பணி தீவிரம்
/
ரவுண்டானாக்கள் அழகுப்படுத்த புதர்கள் அகற்றும் பணி தீவிரம்
ரவுண்டானாக்கள் அழகுப்படுத்த புதர்கள் அகற்றும் பணி தீவிரம்
ரவுண்டானாக்கள் அழகுப்படுத்த புதர்கள் அகற்றும் பணி தீவிரம்
ADDED : டிச 11, 2025 05:09 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் ரவுண்டானாக்கள், மைய தடுப்புகள் அழகுப்படுத்துதல் பணிக்காக, புதர்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நிலம் கையகப்படுத்தப்பட்டு, 34.51 கோடி ரூபாய் நிதியில் ரோடு விரிவாக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.
மழைநீர் வடிகால் கட்டும் பணி மற்றும் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மரப்பேட்டை பாலம், தேர்நிலையம், கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில், 'ரவுண்டானா' அமைக்கப்பட்டது. இந்த ரவுண்டானாவில், பொள்ளாச்சியின் அடையாள சின்னங்கள் அமைக்கப்படும் என, விரிவாக்கப்பணியின் போது கூறப்பட்டது.
ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளதால், ரவுண்டானா புதர்கள் மண்டி காணப்படுகிறது. அடையாள சின்னங்களை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், நகராட்சி அலுவலகத்தில் ரவுண்டானா அழகுப்படுத்துதல் குறித்து தொழில் வர்த்தக சபை மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் கடந்த மாதம் கருத்து கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து, நகராட்சி பகுதிகளில் உள்ள எட்டு ரவுண்டானாக்கள், ஆறு எண்ணிக்கையிலான மைய தடுப்புகள் அழகுப்படுத்துதல் பணி சி.எஸ்.ஆர். நிதி வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை அருகே உள்ள ரவுண்டானாக்களில் உள்ள புதர்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேலும், அங்கு சிலை அமைத்தல் உள்ளிட்ட ஆயத்தப்பணிகள் குறித்து, கமிஷனர் குமரன் ஆய்வு செய்தார். அப்போது, நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நகராட்சி கமிஷனர் கூறுகையில், ''ரவுண்டானாக்கள் அழகுப்படுத்தி பாரம்பரிய சிலைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளன,'' என்றார்.

