/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டட உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலை துறை நோட்டீஸ்
/
கட்டட உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலை துறை நோட்டீஸ்
கட்டட உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலை துறை நோட்டீஸ்
கட்டட உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலை துறை நோட்டீஸ்
ADDED : டிச 11, 2025 05:10 AM

அன்னூர்: நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு பிரிவு சார்பில், கட்டட உரிமையாளர்களுக்கு நேற்று நோட்டீஸ் தரப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து, கருவலூர், அன்னூர், பொகலூர் வழியாக, மேட்டுப்பாளையம் வரை, 38 கி.மீ., தொலைவிற்கு, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, 238 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது.
இதற்காக அன்னூர் பேரூராட்சி பகுதியில், சில இடங்களில் தனியாருக்கு சொந்தமான இடங்களை 10 அடி வரை கையகப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மார்க்கிங் செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாநில நெடுஞ்சாலை துறை (நில எடுப்பு பிரிவு) வருவாய் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில், சர்வேயர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் குமரன் ஆகியோர் அவிநாசி சாலையில், கட்டட உரிமையாளர்கள் மற்றும் காலியிட உரிமையாளர்களுக்கு, நிலம் கையகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கும் நோட்டீஸ் வழங்கினர்.
'இதுகுறித்து ஆட்சேபனை இருப்பின், வருகிற 16ம் தேதி காலை 11:30 மணிக்கு, அன்னூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கலாம்' என்றனர்.
அன்னூர் பேரூராட்சியில், 114 பேருக்கு நிலம் கையகப்படுத்த உள்ள நோட்டீஸ் வழங்கப்படுகிறது. 'இரண்டு நாட்களில் நோட்டீஸ் வழங்கப்பட்டு விடும்,' என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

