/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொன்மலை கோவிலில் சத்ரு சம்ஹார யாகம்
/
பொன்மலை கோவிலில் சத்ரு சம்ஹார யாகம்
ADDED : ஜூலை 28, 2025 09:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் குடும்ப நல யாகம் நடந்தது.
கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், கலைக்குழு சார்பில், இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு குடும்ப நல யாகம் நடந்தது.
இதில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், சத்ரு சம்ஹார யாகம் மற்றும் தொழில் அபிவிருத்தி, விவசாயம் மேன்மை, திருமணத்தடை நீங்குதல் உள்ளிட்ட யாகங்கள் நடந்தது. கிணத்துக்கடவு சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.