/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னை மொபைல்ஸின் 'டிஜிட்டல் ஹப்'
/
சென்னை மொபைல்ஸின் 'டிஜிட்டல் ஹப்'
ADDED : அக் 17, 2024 11:48 PM

கோவை 100 அடி ரோட்டில் உள்ள சென்னை மொபைல்ஸின் டிஜிட்டல் ஹப்பில் அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் இடம் பெற்றுள்ளன.
ஸ்மார்ட் 'டிவி' பிரியர்களுக்கு என, இங்கு பிரத்யேக பகுதி இடம் பெற்றுள்ளது. முன்னணி நிறுவனங்களான சோனி, எல்.ஜி., சாம்சங், ஹயர், எம்.ஐ., ஒன் பிளஸ் நிறுவனங்களில் லேட்டஸ்ட் மாடல்கள் அனைத்தும் இங்கு உள்ளன.மொபைல்போன் விரும்பிகளுக்கும் தரைத்தளத்தில் பிரத்யேக பகுதி உள்ளது. ஆப்பிள், சாம்சங், வீவோ, ஓப்போ, ரெட்மீ, ரியல்மீ, ஒன்பிளஸ், நோக்கியா, டெக்னோ உள்ளிட்ட பல்வேறு மொபைல்போன்கள், புளூடூத், இயர்பட்ஸ், நெக்பேண்ட், சார்ஜர்கள் விற்பனைக்கு உள்ளன.
நேரில் சென்று தான் லேப்டாப் வாங்கனும்னு நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இங்கு அதிக மாடல்கள் உள்ளன.
இல்லத்தரசிகளுக்கு தேவையான பிரிட்ஜ்களும் முதல் தளத்தில் இடம் பெற்றுள்ளன, டபுள்டோர், ஸ்மார்ட் ரக பிரிட்ஜ்கள் உள்ளன. அதேபோல், வாசிங்மெஷின்களில், சாம்சங், எல்.ஜி., ஹயர் ஐ.எப்.பி., இம்பெக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் உள்ளன. மைக்ரோவேவ் ஓவன்களில் சாம்சங், எல்.ஜி., ஐ.எப்.பி., மோர்பி ரிச்சார்ட்ஸ் உள்ளிட்டவற்றின் அனைத்து ரகங்களும் உள்ளன.
பாரின் டூர்
சென்னை மொபைல்ஸின் டிஜிட்டல் ஹப்பில் எந்த ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்கள் மூவருக்கு தாய்லாந்து டூர் அழைத்து செல்லப்பட உள்ளனர். அதேபோல், மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் ஹோம் பரிசும் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் ஹோம் திட்டத்தில், ஒரு, 43 இன்ச் ஸ்மார்ட் 'டிவி', பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் ஓன், அத்துடன் சாம்சங் எஸ், 20 மொபைல்போனும் கிடைக்கும். சிறந்த ஸ்லோகன் எழுதும், மூவருக்கே இந்த டூர் மற்றும் 'ஸ்மார்ட் ஹோம்' பரிசு திட்டத்தில் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும்.
இதுதவிர, வாங்கும் பொருட்களின் அடிப்படையில் வாட்டர் பாட்டில், டிராவல் பேக் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.