sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

செஸ் போட்டியில் வீரர்கள் அசத்தல் 

/

செஸ் போட்டியில் வீரர்கள் அசத்தல் 

செஸ் போட்டியில் வீரர்கள் அசத்தல் 

செஸ் போட்டியில் வீரர்கள் அசத்தல் 


ADDED : பிப் 13, 2024 11:25 PM

Google News

ADDED : பிப் 13, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், தமிழ்நாடு ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியில் வீரர்கள் அசத்தினர்.

தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம், கோவை மாவட்ட சதுரங்க கழகம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி சார்பில், 18வது தமிழ்நாடு ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன் தலைவர் மாணிக்கம், போட்டியை துவக்கி வைத்தார். துணை தலைவர்கள் முருகவேல், விஜயராகவன், செயலாளர் ஸ்டீபன் பாலசாமி, என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி ஆகியோர் பேசினர்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புஸ்கரா செவனுக்கு, தமிழகத்தின் ஆகாஷ் அதிர்ச்சி அளித்தார். 39வது நகர்த்தலில் ஆகாஷ் சாதகமான சூழ்நிலையை பெற்றார். புஸ்காரா, 68வது நகர்வில் ராஜினாமா செய்தார்.

சர்வதேச மாஸ்டர்களான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புஸ்காரா, செவன், டவுசன் ஆலிவியர், ரஷ்யாவை சேர்ந்த கோசெலஷ்விலி, சிட்னிகோவ் ஆண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் தனசேகர், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் அசோக், உடற்கல்வி இயக்குனர்கள் தேவராஜன், ஜோஸ், நாச்சிமுத்து, தொடர்பு அதிகாரி நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us