/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை முற்றுகை
/
குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை முற்றுகை
ADDED : பிப் 20, 2025 11:47 PM
கோவை; கோவை, விளாங்குறிச்சியை சேர்ந்த மனோஜ் குமார், புவனேஸ்வரி தம்பதிக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு குடல் சார்ந்த பிரச்னை இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து, குழந்தையை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்த நிலையில், நேற்று அதிகாலை குழந்தை உயிரிழந்தது.
சம்பவம் குறித்து குழந்தையின் உறவினர்கள் கூறுகையில் 'நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு அதிக அளவில் 'எனிமா' அளித்து உள்ளனர். இதனால் குழந்தை மயக்கமடைந்தது. செவிலியர்கள் மருத்துவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லாமல் அலட்சியமாக இருந்ததால் குழந்தை உயிரிழந்தது' என்றனர்.
ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.