/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும், 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

ADDED : ஆக 17, 2025 11:13 PM
கோவை; முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும், 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு நடைபெறவுள்ள போட்டிகளுக்கு கடந்த ஜூலை, 14ம் தேதி முதல், https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, முன்பதிவு செய்துவருகின்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர், மாற்றுத்திறனாளிகள் என, இதுவரை, 10 லட்சம் பேர் மாநிலம் முழுவதும் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவுக்கு இன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் முன்பதிவு செய்துவரும் நிலையில், முன்பதிவுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. வரும், 20ம் தேதி இரவு, 8:00 மணி வரை முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள் ளது.
மாணவர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லுாரிகள் வாயிலாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம்.