/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் குழந்தை தொழிலாளர்கள் இரு ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் அபராதம்
/
மீண்டும் குழந்தை தொழிலாளர்கள் இரு ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் அபராதம்
மீண்டும் குழந்தை தொழிலாளர்கள் இரு ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் அபராதம்
மீண்டும் குழந்தை தொழிலாளர்கள் இரு ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் அபராதம்
ADDED : ஜூன் 10, 2025 09:52 PM
கோவை; கோவை மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில், 4 குழந்தைத் தொழிலாளர், 12 வளரிளம் தொழிலாளர் மீட்கப்பட்டு, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என, தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் சுபாஷ் சந்திரன் அறிக்கை:
அனைத்துக் குழந்தைகளும் பள்ளி செல்லும், அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட கோவை மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லா மாவட்டமாக மாற்ற, அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, எவ்வித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை, அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு அபாயமற்ற பணிகளில் ஈடுபடுத்தும் தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் துறை, தொழிற்சாலைகள் துறைக்கு, உரிய அறிவிப்பு படிவம் அளிக்க வேண்டும்.
மொத்த வேலை நேரம் 6 மணி நேரம் மட்டுமே. 3 மணி நேரத்துக்கு 1 மணி நேரம் ஓய்வு இடைவெளி தர வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இரவு 7:00 முதல் காலை 8:00 மணி வரை, பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
2023 ஏப்., முதல் இதுவரை கோவை மாவட்டத்தில் 4 குழந்தைத் தொழிலாளர்களும், 12 வளரிளம் பருவ தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். ஏப்., 2024 முதல் இதுவரை 19 வழக்குகள் முடிக்கப்பட்டு, மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் தொழிலாளர், வளரிளம் தொழிலாளர் பணிக்கு அமர்த்தப்பட்டால், பொதுமக்கள் 1098 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். புகார்தாரர் விவரம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு, சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.