/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை
/
அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை
ADDED : மே 13, 2025 10:18 PM

மேட்டுப்பாளையம்: குறிஞ்சி நாயகி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில், குறிஞ்சி ஈஸ்வரர் கோவில் உள்ளது. இதில் குறிஞ்சி நாயகி அம்மன் சன்னதி உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை நடந்தது.
பக்தர்கள் தீர்த்தம் மற்றும் பால் குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து, அம்மன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பின் சுவாமிக்கு அலங்காரம் செய்தனர். விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர். இரவு சித்ரா பவுர்ணமி பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.