/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
18 வயதுக்கு மேல் கொலஸ்ட்ரால் பரிசோதனை; இருதயவியல் மாநாட்டில் டாக்டர்கள் வலியுறுத்தல்

ADDED : செப் 01, 2025 06:20 AM

கோவை; கார்டியாலஜிகல் சொசைட்டி ஆப் கோவை சார்பில், இருதயவியல் துறை மாநாடு, நேற்று ரெசிடென்சி ஹோட்டலில் நடந்தது.
இதில், டாக்டர் கண்ணன் கூறியதாவது:
இதயம் சார்ந்த பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். இந்தியாவில், 1.7 சதவீதம் பேர் இதய செயலிழப்பு அபாயத்தில் உள்ளனர். பாதிக்கப்படும் நபர்களில், 10-15 சதவீதம் மேற்கத்திய நாடுகளை காட்டிலும் இளையவர்கள். பாதிப்பு இருப்பது உறுதி செய்த ஓராண்டுகளில், 30 சதவீதம் பேரும், ஐந்து ஆண்டுகளில் 60 சதவீதம் பேரும் இறந்து விடுகின்றனர். புற்றுநோயை காட்டிலும் இதனால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மாரடைப்பு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை இதய செயலிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
தற்போதைய சூழலில், 18 வயதுக்கு மேல் அனைவரும் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. வாழ்வியல் மாற்றங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதில், இருதயவியல் துறையில் புதிதாக ஏற்பட்டுள்ள நோய் சார்ந்த விஷயங்கள், சிகிச்சை தொழில்நுட்பங்கள், மருந்துகள் பயன்பாடு, நோயாளிகளின் தன்மைக்கு ஏற்ற அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், கலந்துரையாடல் நடந்தது.
இத்துறையில் சிறந்து விளங்கிய டாக்டர்கள், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.