/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கடவுளிடம் நெருக்கமாக்குகிறது கிறிஸ்துமஸ் பண்டிகை!'
/
'கடவுளிடம் நெருக்கமாக்குகிறது கிறிஸ்துமஸ் பண்டிகை!'
'கடவுளிடம் நெருக்கமாக்குகிறது கிறிஸ்துமஸ் பண்டிகை!'
'கடவுளிடம் நெருக்கமாக்குகிறது கிறிஸ்துமஸ் பண்டிகை!'
ADDED : டிச 24, 2024 07:11 AM

கோவை; கோவை, ராமநாதபுரம் சீரோ மலபார் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் பால் ஆலப்பட் கூறியதாவது:
ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் தொடர்பு ஏற்பட்டபோது, ஆழ்கடலில் முதல்முறையாக என்ன செய்தியை அனுப்ப வேண்டும் என்று, கட்சிகள் விவாதித்தன. நீண்ட விவாதத்துக்கு பின், தேவதுாதரின் செய்தி, ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென முடிவு செய்தனர்.
கடவுளையும், அற்புதமான அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்கக் கண்டத்துடன் தொடர்புகொள்வதற்கு, உதவிய கடவுளுடைய வார்த்தையின் வல்லமையையும் அவர்கள் மறக்கவில்லை. முழு உலகமும், குறிப்பாக கிறிஸ்தவ மண்டலமும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உள்ளது. பிறப்பு, செயல், போதனைகள் மற்றும் உயிர் பலி மூலம் முழு உலகத்தின் ரட்சகரும் ஆண்டவருமான, இயேசு கிறிஸ்துவின் ஒப்பற்ற பிறந்தநாள். உலகில் மனித நேயத்துக்காக, வானில் இருந்து மண்ணுலகிற்கு வந்த தேவ குமாரனின் பிறந்தநாள்.
அந்தப் பிறவிக்கு அன்றும், இன்றும் சொல்ல வேண்டிய ஒரே ஒரு செய்தி, எல்லாமே இறைவனிடம் இருந்தே என்று நம்பி, எண்ணி, இறைவனின் எல்லையில்லா மகிமையுடன் பேசி, செயலாற்றி, உணர்வுபூர்வமாகப் படைத்தவனிடம் நன்றியுடன் சேர்ந்தால்,அமைதியாகவும் நம்பிக்கையுடனும் முன்னேறலாம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.