ADDED : மார் 20, 2025 05:49 AM
நகை, பணம் திருட்டு
பி.என்.புதுாரை சேர்ந்தவர் முத்துக்குமார், 38; கால் டாக்ஸி டிரைவர். இவர் கடந்த 18ம் தேதி சிறுமுகை சென்றார். பின்னர், மதியம் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த தங்க நகை, பணம் ரூ. 4,500 உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. ஆர்.எஸ் புரம் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாகனம் மோதி முதியவர் பலி
போத்தனுாரை சேர்ந்தவர் அய்யாசாமி, 75. இவர் தனது நண்பருடன் பைக்கில் வெள்ளலுார் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக வந்த, மற்றொரு பைக் மோதியதில் அய்யாசாமி சாலையில் துாக்கி வீசப்பட்டார். காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
காந்திபுரம் பகுதியில் வெளியூர் நபர் ஒருவர், கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காட்டூர் போலீசார் காந்திபுரம் டெக்ஸ்டூல் பாலம் அருகில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நபரிடம் விசாரித்தனர். அவர், துாத்துக்குடியை சேர்ந்த ராபின் பிரதீப், 26 என்பது தெரியவந்தது. அவரிடம் 1.5 கிலோ கஞ்சா இருந்தது. போலீசார் ராபின் பிரதீப்பிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.