/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூராட்சிக்குரூ.26 லட்சம் வருமானம்
/
பேரூராட்சிக்குரூ.26 லட்சம் வருமானம்
ADDED : மே 19, 2025 11:13 PM
அன்னுார்; இருசக்கர வாகன ஸ்டாண்ட் ஏலத்தில் பேரூராட்சிக்கு, 26 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
அன்னுார், பஸ் ஸ்டாண்டில், பேரூராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன ஸ்டாண்ட் உள்ளது.
இந்த ஸ்டாண்டில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் கடந்த மாதம் நடந்தது. இதில் சந்திர மோகன் என்பவர் மாதம் 2 லட்சத்து,10 ஆயிரம் ரூபாய் கட்டணம் பேரூராட்சிக்கு செலுத்துவதாக கூறி ஏலம் எடுத்தார். மறுநாள் வெள்ளிங்கிரி என்பவர் மாதம் 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் செலுத்துவதாக கூறி பத்து மாத தொகையை பேரூராட்சிக்கு செலுத்தினார்.
இதையடுத்து முந்தைய ஏலம் ரத்து செய்யப்பட்டு, மறுஏலம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் கார்த்திகேயன் ஏலத்தை நடத்தினர். இதில் ஒட்டக மண்டலம் பாலாமணி என்பவர் மாதம் 2 லட்சத்து 64 ஆயிரத்து நூறு ரூபாய் செலுத்துவதாக கூறி ஏலம் எடுத்து 10 மாதத் தொகையான 26 லட்சத்து 41 ஆயிரத்து 200 ரூபாய் செலுத்தினார்.
கடந்த மார்ச் வரை, ஒரு ஆண்டுக்கு 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பேரூராட்சிக்கு வருமானம் கிடைத்து வந்தது.
தற்போது இந்த ஆண்டு ஏலத்தில் பத்து மாதங்களுக்கு மட்டும் 26 லட்சத்து 41 ஆயிரத்து 200 ரூபாய் பேரூராட்சிக்கு வருமானம் கிடைத்துள்ளது.